2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ’மோடியின் உத்திரவாதம், என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை
- ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி
- 2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை
- மகளிர் இளையோர் விவசாயிகள் ஏழைகளின் மேம்பாடு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
- வடகிழக்கு மாநிலங்களில் பபுல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படும்
- ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- வாழ்கை தர மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தப்படும்
- 3வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கு எட்டப்படும்
- ஒரேய நாடு, ஒரேய தேர்தலுக்காக பொது வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
- மக்கள் மருதங்களில் 80% வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் ரேஷனில் இலவச உணவு தானியங்கள்
- 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படும்
- வீடுகளில் சோலார் தகடுகள் மூலம் இலவச மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு நடவடிக்கை
- முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 20 லக்ஷம் ரூபாய் அதிகரிக்கப்படும்
- பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்
- ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு போன்ற தான் இருக்கும் இடத்தில் வக்கர்களுக்கும் உரிமை
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு மருந்து காப்பீடு அட்டை வழங்கப்படும்
- நாடு முழுவதும் 3 கோடி பெண்களை லட்சதிபதிகளாக்கும் திட்டம்
- விளையாட்டுத் துறையில் வீராங்கனைகளின் பங்களிப்பை அதிகரிக்க அவர்களுக்கு பிரத்யேக செயல்முறை வகுக்கப்படும்
- 2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் கவுரவ ஆண்டாக கடைபிடிக்கப்படும்
- நாடு முழுவதும் குறைந்த விலையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும்
- நாட்டின் தொண்மையான மொழியான தமிழை உலகம் ,முழுவதும் கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் பாஜக நடவடிக்கை
- திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும்
- பெண்கள் சுகாதாரத்தை உறுதி செய்ய ரூ. 1க்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்
- குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகக்குறைந்த வாடகைகளில் கான்க்ரீட் வீடுகள் ஒதுக்கப்படும்
- ஜல் ஜீவன் திட்டம் மூலம் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
- கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதல் திட்டம் செயல்படுத்தப்படும்
- நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ப=புல்லட் சேவை திட்டம்
- வந்தே பாரத் மேட்ரோ ஸ்லீப்பர் உற்பட 3 வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்
- உலக அளவில் அனைத்து துறைகளின் தலைமையிலான இந்தியாவை மாற்ற நடவடிக்கை
இந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுதான் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.