தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பகத் பாசில்.
கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த பகத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவர் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக மாறியது.
நடிகர் பகத் பாசிலுக்கு ADHD (Attention deficit hyperactivity disorder) கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு எனும் நரம்பியல் பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பகத் பாசில் இதுபோன்ற அரிய வகை நோய் குழந்தைகளையே பாதிக்கும் என்றும் குழந்தைப் பருவத்திலேயே சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், 41 வயதான தனக்கு இந்த பாதிப்பு உள்ளது என்றும் சரி செய்ய முடியுமா? என மருத்துவரை கேட்டதாக கூறியுள்ளார். இதன் மூலம் அந்த அரிய வகை நோயால் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.