பாதாம் வைட்டமின் E, B6, ரிபோஃப்ளேவின், தயமின், நியாசின், ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு, இரும்பு போன்ற தாதுக்களை கொண்டுள்ளது.
ஊறவைத்த பாதாம் நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

மேலும் ,பாதாமில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்க உதவும். இது எடை இழப்புக்கு உதவும்.பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

download 16

பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் B6 மூளை செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் .சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது .
இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் ,பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் செய்கிறது . இருப்பினும் பாதாமை தினமும் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here