சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடரந்து சேலம் ரயில் நிலையத்தில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட போலீசார் வழித்தடங்கள், வண்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகளை ஆய்வு போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்தனர்.
இதையடுத்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களால் பயணிகளின் உடமைகளை முழுமையாக சோதனை செய்த பின்னர் பயணிகளை பயணத்திற்கு அனுமதிக்பட்டனர்.