தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் இளங்கலைப் படிப்பின் முக்கியப் பாடங்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் அல்லாத பாடங்களையும் விருப்பத்தேர்வுகளாகப் படிக்க வேண்டும்.
இது கிரெடிட் மதிப்பீட்டையும் பெறுகிறது. இந்த மதிப்பெண் மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் அட்டை, கிரேடு மற்றும் தரவரிசையில் காரணியாக உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மாணவர் படையை (என்சிசி) கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுப் பாடமாக அங்கீகரித்துள்ளது.
‘கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்’ என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.