சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இவர் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் தனி கவனத்தைப் பெற்று வருகின்றது. நீண்ட நாள்களாகத் திரைக்கு வராமல் இருந்த இப்படத்தின் அப்டேட்டை சசிகுமார் சமீபத்தில் வெளியிட்டார். அதில் நந்தன் திரைப்படம் செப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் சூரி “படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகியும் நந்தன் தந்த பிரமிப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அன்பு இரா.சரவணனன் அண்ணனுக்கும், சசிகுமார் அண்ணனுக்கும், ஜிப்ரான் சகோதரருக்கும் நந்தன் பட குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சூரியுடன் கருடன் படத்தில் சசிகுமார் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here