அரசு பள்ளிகளில் 2024 – 25 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளை சேர்க்க பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

508539

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நேரடியாகவும் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் நேரடியாக சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகள் சேர்க்கப்படும் போது சிலர் போலி ஆவணங்களை தாக்கல் செய்வதால் பிரச்சனை ஏற்படுவதாகவும் இதனால் போலி விண்ணப்பங்களை தவிர்க்கவே நேரடியாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here