“லீடர், அரசியல் படமல்ல” – லெஜண்ட் சரவணன்

Priya
12 Views
1 Min Read

‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர், லெஜண்ட் சரவணன். தற்போது துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு லீடர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் glimpse வீடியோ நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய லெஜண்ட் சரவணன், “லீடர் என்ற தலைப்பை பார்த்ததும் இது அரசியல் சார்ந்த படமா என்ற சந்தேகம் வரும். ஆனால் இது அரசியல் சார்ந்த படம் இல்லை. இது ஒரு கமர்ஷியல் படம்.

ஒரு சாமானியன் வாழ்வில் எதிர்கொள்ளும் அசாதாரண நிகழ்வுகளை படமாக உருவாக்கியுள்ளார், இயக்குநர் துரை செந்தில்குமார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம். என் வீட்டு பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாருக் கான் இன்னொரு பக்கம் சல்மான்கான் படத்தை ஒட்டி வைத்திருப்பேன்.

ஒரு நாள் நானும் இப்படி ஆவேன் என அம்மாவிடம் சொன்னபோது, அம்மா என்னை வாழ்த்தினார்கள். ஒரு படம் வெற்றியடைவது தனி மனிதனின் வெற்றி அல்ல.

சினிமா இப்போது இறுங்குமுகத்தில் உள்ளது. சினிமாவில் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது. அதனால், நான் அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். சினிமா புத்தெழுச்சி பெற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply