தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 29, 2025) தென்காசி மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்ட மக்களுக்கு மொத்தமாக ரூ.1020 கோடி மதிப்பிலான நிறைவுற்ற பணிகளை துவங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ள செல்லும் வழியில், சுரண்டை நகராட்சி, கீழசுரண்டையில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி முதலமைச்சருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதலமைச்சரும் அம்மாணவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றி உற்சாகப்படுத்தினார்.

