ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், கபடி விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை இசைமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகொதரிகளின் அபாரன விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை . மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

