தமிழ்நாட்டில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்.

Surya
112 Views
0 Min Read
Highlights
  • வடகிழக்கு பருவமழை இன்று (அக். 16, 2025) முதல் தொடங்கியது
  • நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகியதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
  • தமிழகம், புதுச்சேரி - காரைக்கால் உட்பட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
  • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிடக் கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இன்று முழுமையாக விலகிய நிலையில்,தமிழ்நாடு, புதுச்சேரி -காரைக்கால், கடலோர ஆந்திரா ராயலசீமா, தெற்கு உட்புற  கர்நாடகா மற்றும் கேரளா-மஹே ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிடக் கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply