கரூர் விவகாரம்: கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரபரப்பு: கரூர் உயிரிழப்பு விவகாரத்தை எழுப்பி, கருப்பு பேட்ஜுடன் சட்டமன்றத்திற்கு வந்த அதிமுகவினர்

prime9logo
133 Views
0 Min Read
Highlights
  • அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.  
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்,அக்டோபர் 14 ஆம் தேதி துவங்கிய கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது.கூட்டம் துவங்கியவுடன் கரூர் கூட நெரிசல் உயிரிழப்புகள்,மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் நடந்து வரும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.  

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply