இந்திய சினிமா உலகில், மக்களின் மனதைக் கவர்ந்த வெகு சில படங்களில் `காந்தாரா’வுக்கு எப்போதும் ஒரு தனி இடமுண்டு. நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்து 2022-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம், வெறும் ஒரு படமாக மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பூதகோலா எனும் கலை வடிவத்தையும், அதன் ஆன்மிகத்தையும் உலகிற்கு உணர்த்தியது.
இந்தியா முழுக்க கொண்டாடப்பட்ட காந்தாரா’ திரைப்படம், தற்போது ஒரு புதிய கௌரவத்தை பெற்றுள்ளது. இந்திய அஞ்சல் துறை, கர்நாடக அஞ்சல் வட்டம், மற்றும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து,
காந்தாரா’ படத்தைக் கௌரவிக்கும் விதமாக ஒரு சிறப்பு அஞ்சல் கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப்’ ஆகியவற்றை வெளியிட்டுள்ளன. இந்தப் பெருமை
காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
ரிஷப் ஷெட்டியின் பெருமிதம்!
பெங்களூருவில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், `காந்தாரா’ படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிராகந்தூர், கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் கலாசாரத்தின் வேர்களையும், வழிபாடுகளையும் உலகிற்கு எடுத்துச் சென்றது. அஞ்சல் துறை எங்கள் படைப்பைக் கௌரவப்படுத்தியது பெருமைக்குரியது. இது வெறும் படத்திற்கான அங்கீகாரம் அல்ல. இது எங்கள் மண்ணின் கலாசாரத்திற்கும் மக்களுக்கும் கிடைத்த மரியாதை” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் போதிக்கும் காயகவே கைலாச’ என்ற தத்துவத்தின் மீது தனக்குள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு அஞ்சல் அட்டையில் அந்த வரிகளை ரிஷப் ஷெட்டி கையெழுத்திட்டார். இது, அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு திரைப்படத்திற்கு அஞ்சல் துறை சார்பில் இப்படி ஒரு சிறப்பு அட்டை வெளியிடப்படுவது அரிதானது. இது
காந்தாரா’ படத்தின் வெற்றி, தேசிய எல்லைகளைத் தாண்டி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் புதிய அங்கீகாரம், ரசிகர்களுக்கு `காந்தாரா’ படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
`காந்தாரா சாப்டர் 1’ எதிர்பார்ப்பு!
காந்தாரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் ப்ரீகுவலாக
காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரிஷப் ஷெட்டி மீண்டும் ஒருமுறை இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். `காந்தாரா’வின் தொடக்கம் மற்றும் அதன் கதைக்களம் குறித்த பல தகவல்கள் இந்த ப்ரீகுவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கம் போலவே,
காந்தாரா சாப்டர் 1’ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அஞ்சல் துறை வழங்கிய இந்த சிறப்பு அஞ்சல் அட்டை, `காந்தாரா’ ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிசாக அமைந்துள்ளது. இதன் மூலம், கன்னட சினிமா மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.