காசா போர்: குறைந்தது 21,000 குழந்தைகள் நிரந்தர ஊனம் – ஐ.நா அறிக்கை அதிர்ச்சி

காசா போர்: குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் ஐ.நா அறிக்கை.

By
Priyadharshini
Priyadharshini is a dedicated Tamil news journalist known for her clear, factual, and engaging reporting. She covers a wide range of topics including politics, society, cinema,...
124 Views
2 Min Read
Highlights
  • காசா போரில் 21,000 குழந்தைகள் நிரந்தரமாக ஊனமடைந்துள்ளதாக ஐ.நா குழு தகவல்.
  • போரால் பாதிக்கப்பட்ட 40,500 குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைபாட்டால் அவதி.
  • உதவி சாதனங்களை இழந்த மாற்றுத்திறனாளிகள், உணவு, நீர் இன்றி போராட்டம்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காசாவின் நிலைமை உலகையே உலுக்கி வருகிறது. அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதில் இருந்து, காசாவில் குறைந்தபட்சம் 21,000 குழந்தைகள் நிரந்தர ஊனமுற்றவர்களாக மாறியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கையின்படி, போரால் பாதிக்கப்பட்ட சுமார் 40,500 குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் நிரந்தர ஊனமடைந்துள்ளனர். இந்த அறிக்கை, போரின் கொடூரமான மனிதநேயப் பாதிப்பை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

போர் வெடித்ததில் இருந்து, ஊனமுற்ற மக்கள் எதிர்கொண்ட சவால்கள் எண்ணிலடங்காதவை. ஊர்தி உதவியின்றி, கண்ணியமற்ற மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் சேற்றுக்குள் ஊர்ந்து தப்பிச் செல்ல வேண்டிய அவலங்கள் குறித்து ஐ.நா குழு விவரித்துள்ளது. மேலும், ஊனமுற்றவர்களுக்கு உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதில் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் தங்கள் உயிர்வாழ்வுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

வெளியேற்ற உத்தரவுகள்: பெரும் சவால்

காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களின் போது வெளியிடப்பட்ட வெளியேற்ற உத்தரவுகள், செவித்திறன் அல்லது பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு “அணுக முடியாததாக” இருந்ததால், வெளியேறுவது சாத்தியமற்றதாக இருந்தது என ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், பல ஊனமுற்ற மக்கள் ஆபத்தான பகுதிகளில் சிக்கித் தவிக்க நேர்ந்தது. இது, போர் விதிகளில் உள்ள மனிதநேயமற்ற இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் மீதான கட்டுப்பாடுகள்

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் வருவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள், ஊனமுற்றோரை விகிதாசாரமற்ற வகையில் பாதித்துள்ளதாக ஐ.நா குழு தெரிவித்துள்ளது. ஊனமுற்றோரில் 83% பேர் தங்களது உதவி சாதனங்களை (சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் போன்றவை) இழந்துவிட்டனர். பெரும்பாலானவர்களால் carts போன்ற மாற்று வழிகளைக் கூட வாங்க முடியவில்லை. இது, போரின் போது மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் கூடுதல் துயரங்களை எடுத்துக்காட்டுகிறது.

காசாவில் நடந்த இந்த கொடூரங்கள், மனிதகுலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. உலக நாடுகள் இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share This Article
Priyadharshini is a dedicated Tamil news journalist known for her clear, factual, and engaging reporting. She covers a wide range of topics including politics, society, cinema, and everyday developments that matter to readers. Her journalism reflects professionalism, responsibility, and a commitment to truth.
Leave a Comment

Leave a Reply