அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

  • குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு (குரூப் 4) குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு வெளியாக உள்ளது.
  • குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகிறது.

இது தொடர்பாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here