சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் பகுதியில், ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் சந்தை அமைத்தல் பணி, ராயபுரம் மூலகொத்தலத்தில் , ரூ.14.31 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்தல் பணி , புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் ரூ. 11.43 கோடி மதிப்பீட்டில் நவீன சலவைக் கூடம் அமைத்தல் பணி மற்றும் ரூ. 16.96 கோடி மதிப்பீட்டில் புழல் ஏரிக்கரை மேம்படுத்துதல் பணி உள்ளிட்ட 6 திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் அயனாவரம் நவீன சலவைக்கூடம் உள்ளிட்ட 4 முடிவுற்றப் பணிகளையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தயாநிதி மாறன் எம்.பி, கலாநிதி வீராசாமி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here