டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே காரணம் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகள் “அப்பட்டமான பொய்” எனப் பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா மறுத்துள்ளார். பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் நடுவே 300 கி.மீ. தூரத்தில் ஹரியானா இருக்கும்போது, பஞ்சாப் புகை மட்டம் எப்படி டெல்லிக்கு வரும். “புகையை மூட்டை கட்டியா டெல்லிக்கு அனுப்புகிறோம்?” எனக் கிண்டலடித்த அவர், ஹரியானா புகை பாகிஸ்தானுக்குச் செல்கிறதா? அதை ஏன் பாஜக கண்டுகொள்வதில்லை என்றும் சாடினார்.
பஞ்சாப் விவசாயிகளின் பெயரைக் கெடுக்க பாஜக திட்டமிட்டு செயல்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் பல்தேஜ் சிங் பன்னு குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியின் காற்று மாசு இப்போது இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அரசியல் மோதலாக மாறியுள்ளது.

