ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘கிங்’. இதை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பதான்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத்துடன் வெளியான இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கவுரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
டிச. 24-ல் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் இணைந்து இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருமணம் காரணமாக இப்படத்தில் இருந்து அனிருத் விலகியுள்ளார். இரு தரப்பினரும் பேசி, சுமுகமாகப் பிரிந்து கொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்காக அவர் ஏற்கெனவே அமைத்திருந்த தீம் மியூசிக்கை, ஷாருக்கானுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து சச்சின் – ஜிகர் இப்படத்தின் இசைக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

