அருள்​நிதி – அமீரின் ‘வேட்ட சாமி’ டிசம்பரில் ரிலீஸ்

Priya
789 Views
1 Min Read

அருள்நிதி – அமீர் இணைந்து நடித்துள்ள ‘வேட்ட சாமி’ படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பம்பர்’ படத்தை இயக்கிய எம்.செல்​வகு​மார் இயக்​கி​ இருக்கும் ‘வேட்ட சாமி’ படத்தில் அருள்நிதி, அமீருடன், ஆடு​களம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்​து​மதி மணி​கண்​டன், மைனா நந்​தினி, இயக்​குநர் தமிழ், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்திரங்​களில் நடித்​துள்​ளனர்.

நெல்லை மாவட்டத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘வேட்ட சாமி’ இந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும். சட்டத்தில் இருந்து தப்பி, இறைவனை எதிர்கொள் எனத் தெரிவித்துள்ளது.

7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்துக்கு, ஜிப்​ரான் இசையமைத்துள்ளார், ஆர்​.டி.ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply