ஹிஜாப் அணிந்து முருகன் பாடலை பாடியதற்காக இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Priya
891 Views
1 Min Read

ஹிஜாப் அணிந்து முரு​கன் பாடலைப் பாடிய இஸ்​லாமிய சிறுமிக்கு மிரட்​டல் விடுத்​தவர்​களுக்கு நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தனி​யார் தொலைக்​காட்​சி​யில் நடை​பெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்​சி​யில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்​லாமிய சிறுமி, ‘அழகன் முரு​க​னிடம் ஆசை வைத்​தேன்’ என்ற பக்​திப் பாடலைப் பாடி​னார் என்​ப​தற்​காக, அச்​சிறுமிக்கு சில இஸ்​லாமியர்​கள் மிரட்​டல் விடுப்​பதை ஆளும் தவெக அரசின் கவனத்​துக்கு கொண்​டுவர விரும்​பு​கிறேன்.

கிறிஸ்தவ மதத்​தைப் பின்​னணி​யாகக் கொண்ட, கே.ஜெ.யேசு​தாஸின் ஐயப்​பன் பாடல்​களை​யும், எல்​.ஆர்​.ஈஸ்​வரி​யின் அம்​மன் பாடல்​களை​யும் கொண்​டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்​தில், மற்ற மதத்​தினர் இந்து பக்​திப் பாடல்​களை பாடு​வது ஒன்​றும் புதிதல்ல. அதே​போல், இந்து மதத்​தைச் சேர்ந்த பலர், இஸ்​லாமிய மற்​றும் கிறிஸ்​தவப் பக்​திப் பாடல்​களை​யும் பாடி​யுள்​ளனர்.

‘கலை’ என்ற குடை​யின் கீழ், நாம் அனை​வரும் சமம். அப்​படி​யிருக்​கை​யில் முரு​க​னின் பாடலைப் பாடியதற்​காக ஒரு இஸ்​லாமிய சிறுமி மீது, இத்​தனை வெறுப்​பு​கள் பரப்​பப்​படு​வது மன வேதனையளிக்​கிறது.

எனவே, சம்​பந்​தப்​பட்ட சிறுமிக்கு மிரட்​டல் விடுப்​பவர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்​ப​தோடு, அவருக்​கும் அவரது குடும்​பத்​தா​ருக்​கும் அரசு முழு பாது​காப்பு அளிக்க வேண்​டும் என முதல்​வர் விஜய்​யிடம் வேண்​டு​கோள் விடுக்​கிறேன்.

அது​மட்​டுமன்​றி, அச்​சிறுமிக்கு தமிழக மக்​கள் அனை​வரும் துணை​யாக நிற்க வேண்​டு மென்​றும் கேட்​டுக் கொள்​கிறேன்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply