சிறு வயதில் இருந்து ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன்: அமைச்சர் வெங்கடரமணன் தகவல்

Priya
890 Views
1 Min Read

தமிழகத்​தில் ரேஷன் கடை​யில் அரிசி மிக​வும் தரமாக இருக்​கிறது. நானும் சிறு வயதில் இருந்து ரேஷன் அரிசி​தான் சாப்​பிடு​கிறேன் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்​கடரமணன் தெரி​வித்​தார்.

சென்னை மாநக​ராட்​சி​யில் மூலதன நிதி​யின் கீழ் ரூ.8.49 கோடி​யில் மயி​லாப்​பூர் லஸ் சர்ச் சாலை​யில், புனரமைக்​கப்​பட்ட நாகேஸ்வர ராவ் பூங்​காவை உணவுத் துறை அமைச்​சர் ப.வெங்​கட்​ரமணன் பொது​மக்​கள் பயன்​பாட்​டிற்​காக நேற்று திறந்து வைத்து பார்​வை​யிட்​டார்.

அதன்​பின் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த ஆட்​சி​யில் ரூ.12 கோடி​யாக மதிப்​பீடு செய்​யப்​பட்ட பொருட்​களின் தேவை​களை குறைத்​து, ரூ.8 கோடி​யில் நாகேஸ்வர ராவ் பூங்கா புனரமைக்​கப்​பட்​டுள்​ளது.

பொன்னி அரிசி சாப்​பிடு​வதை மக்​கள் சமூக அந்​தஸ்​தாக (சோஷியல் ஸ்டேட்​டஸ்) பார்க்​கிறார்​கள் என்று நான் ஆங்​கிலத்​தில் கூறியது தவறாக புரிந்​து​கொள்​ளப்​படு​கிறது. மக்​களின் விருப்​பம் என்​று​தான் நான் சொன்​னேன். நானும் சிறு வயதில் இருந்து ரேஷன் அரிசி​தான் சாப்​பிடு​கிறேன்.

சோஷியல் ஸ்டேட்​டஸ் என்​பது மக்​கள் விருப்​பத்​துக்​காக சாப்​பிடு​வது. வார இறுதி நாட்​களில் சனி, ஞாயிறுக்​கிழமை​களில் வெளி​யில் சென்று சாப்​பிடு​வோம். அது ஒரு சந்​தோஷம், நம்ம குடும்​பத்​துக்​காக செல​விடும் நேரம் அது. அதை​தான் சொன்​னேன்.

தரமான அரிசி

வெங்​காய விலையை கட்​டுப்​படுத்த மத்​திய அரசின் கிடங்​கில் இருந்து கொள்​முதல் செய்து அமுதம் அங்​காடி மற்​றும் கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் வெளி மார்க்​கெட்​டை​விட குறைந்த விலை​யில் விற்​பனை செய்​கிறோம்.

மலிவு விலை​யில் 1 லட்​சம் மெட்​ரிக் டன் அரிசியை கொள்​முதல் செய்​து, குறைந்​த​பட்​சம் 5 கிலோ அரிசியை அனைத்து ரேஷன் கடைகளி​லும் ரூ.30-க்கு வழங்​கு​கிறோம்.

ரேஷன் கடை​யில் அரிசி தரமாக இருக்​கிறது. மக்​கள் இதை​தான் சாப்​பிட வேண்​டும் என்று நான் கட்​டாயப்​படுத்த மாட்​டேன். ஒவ்​வொரு மக்​களின் வாழ்​வா​தா​ர​மும் மிக முக்​கி​யம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply