சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ பூஜையுடன் தொடக்​கம்

Priya
782 Views
1 Min Read

தமிழ், தெலுங்​கில் நடித்து வரும் சந்தீப் கிஷன், அடுத்து நடிக்​கும் ‘கரிகாலா’ படத்தை யுகேந்​தர் முனி இயக்​கு​கிறார். ஸ்ரீசரண் பகாலா இசையமைக்​கும் இப்​படத்​துக்கு பிர​வீன் பங்​காரி ஒளிப்பதிவு செய்கிறார். ஷைனிங் பிக்​சர்ஸ் சார்​பில் மகிதர் ரெட்டி, ராஜசேகர் அன்​னபிமோஜு தயாரிக்​கின்​றனர்.

தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் 2 பாகங்​களாக இப்​படம் உருவாகிறது. புராணம், கற்​பனை, சாகசம் எனப் பல்​வேறு அம்சங்​களின் கலவை​யாக தயா​ராகும் இப்​படத்​தில் கேத்​ரின் தெர​சா, சாக் ஷி மடோல்​கர், காயத்ரி பரத்​வாஜ் ஆகியோர் கதா நாயகி​களாக நடிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பை தயாரிப்​பாளர் ராஜசேகரின் தாயார் சத்​ய​வதி தொடங்கி வைத்​தார்.

சந்​தீப் கிஷன் கூறும்​போது, “கடந்த சில ஆண்​டு​களில் பல்​வேறு கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளேன். கலை மீதான ஆர்​வத்​தின் காரண​மாகவே ‘கரி​காலா’ மற்​றும் ‘பவர் பெட்’ ஆகிய படங்​களைத் தேர்ந்​தெடுத்​தேன். இந்த 2 படங்​களும் எனது திரைப்​பயணத்​தின் சிறந்த படங்​களாக இருக்​கும்​ என்​று நம்​பு​கிறேன்​” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply