தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நேற்றிலிருந்தே அதன் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.புவியியல் காண்
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்ட நிலையில் புதுச்சேரி, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த பருவமழை துவங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

