வெற்றி பயணம் திட்டத்தில் இணைத்து மானியம் தர கோரி தனியார் பேருந்துகள் நாளை வேலை நிறுத்தம்

Priya
802 Views
1 Min Read

தமிழக அரசு வெற்றி பயணத்​திட்​டத்​தில் தனி​யார் பேருந்​துகளை இணைத்து அதற்கு மானி​யம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட உள்​ள​தாக தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சென்​னை​யில் அக்​கூட்​டமைப்​பின் தலை​வர் தங்​க​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் உள்ள 7 அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​களின் கீழ் இயங்​கும் 69 சதவீத பேருந்​துகளில் மகளிருக்​கான கட்​ட​ணமில்​லாப் பேருந்து பயணம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​திற்கு ‘வெற்றிப் பயணம்’ எனப் பெயரிடப்​பட்​டு, வரும் அக்​டோபர் 2ம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார். வெற்றி பயணம் திட்​டத்​தில் அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவசப் பயணம் வழங்​கப்​படு​வ​தால், தனி​யார் பேருந்​துகளை இயக்க முடி​யாத சூழல் ஏற்​படும்.

இதனால் தனி​யார் பேருந்து துறையைச் சார்ந்​துள்ள சுமார் 3 லட்​சம் குடும்​பங்​கள் பாதிக்​கப்​படும். எனவே, அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவசப் பயணம் அனு​ம​திக்​கப்​படு​வதைப் போல, தனி​யார் பேருந்​துகளி​லும் பெண்​கள், திருநங்​கையர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இலவச​மாகப் பயணிக்க அனு​ம​திக்க வேண்​டும்.

அதற்​கான கட்​ட​ணத்தை அரசு மானிய​மாக தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களுக்கு வழங்க வேண்​டும். எங்​களது கோரிக்​கையை தமிழக அரசின் கவனத்​திற்கு கொண்டு செல்​லும் வகை​யில், செப்​.29ம் தேதி (இன்​று) நள்​ளிரவு 12 மணி முதல் செப்​.30ம் தேதி (நாளை) நள்​ளிரவு 12 மணி வரை தனி​யார் பேருந்​துகளை இயக்​​காமல் வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம். இவ்​​வாறு கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply