கணினிவழி தட்டச்சு தேர்வு அரசாணைக்கு எதிராக உண்ணாவிரதம்

Priya
701 Views
1 Min Read

தட்​டச்சு தேர்​வு​களை கணினி வழி​யில் மட்​டுமே நடத்​தும் அரசாணையை ரத்து செய்​து, இந்த தேர்​வு​களை தொடர்ந்து தட்​டச்சு பொறிகளி​லேயே நடத்த வேண்​டும் என்று கோரி தட்​டச்சு பயிலக உரிமை​யாளர்​கள் மற்​றும தட்​டச்சு பொறி பழுது நீக்​கு​வோர் நேற்று சென்​னை​யில் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர்.

தட்​டச்சு தேர்​வு​கள் உள்​ளிட்ட வணி​க​வியல் தேர்​வு​களை தொழில்​நுட்​பக் கல்வி இயக்க​கம் ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. தற்​போது தட்​டச்சு தேர்​வு​கள், தட்​டச்சு பொறிகள் வாயி​லாக​வும் கணினி வாயி​லாக​வும் நடத்​தப்​படு​கின்​றன. அடுத்த ஆண்டு முதல் இந்த தேர்​வு​களை கணினிவழியில் மட்​டுமே நடத்த தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககம் முடிவுசெய்​துள்​ளது.

இந்​நிலை​யில் இதற்​கான அரசாணையை ரத்து செய்​து, இந்த தேர்​வு​களை தொடர்ந்து தட்​டச்சு பொறிகளி​லேயே நடத்த வேண்​டும் என்று கோரி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானம் அருகே நேற்று உண்​ணா​விரதப் போராட்​டம் நடை​பெற்​றது.

தமிழ்​நாடு தட்​டச்சு பொறி பழுது நீக்​கு​வோர் நலச்​சங்​கம் சார்​பில் சார்​பில் நடை​பெற்ற இந்​தப் போராட்​டத்​தில் அமைப்​பின் மாநிலத் தலை​வர் எஸ்​.​நாக​ராஜ், செய​லா​ளர் ஆர்​.​முரு​கேச​பாண்​டியன், பொருளாளர் கே.கு​மார், துணைத் தலை​வர்​கள் சி.செல்​வ​ராஜ், பி.தரன் உள்பட தட்​டச்சு பயிலக உரிமை​யாளர்​கள், தட்​டச்​சுப்​பொறி பழுது நீக்​கு​வோர் என 300-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

போராட்​டம் குறித்து அமைப்​பின் மாநில தலை​வர் நாக​ராஜ் கூறும்​போது, “அடுத்த ஆண்டு முதல் தட்​டச்சு தேர்​வு​களை கணினி வாயி​லாக மட்​டுமே நடத்த தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககம் திட்​ட​மிட்​டுள்​ளது.

அவ்​வாறு செயல்​பட்​டால் தட்​டச்சு பயில​கங்​களை நம்​பி​யுள்ள லட்​சக்​கணக்​கான குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். மேலும் தட்​டச்சு பொறிகளை பழுது நீக்​கும் தொழிலை மட்​டுமே நம்​பி​யுள்ள 500-க்​கும் மேற்​பட்ட தட்​டச்சு பொறி​யாளர்​கள் பாதிக்​கப்​படு​வர். எனவே புதிய அரசு இதை தடுத்து நிறுத்தி எங்​களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply