‘தி பாரடைஸ்’ படத்துக்கு ட்ரெய்லர் கிடையாது: நானி திட்டவட்டம்

Priya
770 Views
1 Min Read

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்குத் திரையரங்க ட்ரெய்லர் எதுவும் வெளியாகாது என நானி தெரிவித்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை விரைந்து முடிப்பதே தங்களின் முதல் இலக்கு என்று குறிப்பிட்ட நானி, இதற்காக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கவனத்தைத் தேவையின்றி விளம்பர வீடியோக்கள் பக்கம் திருப்ப விரும்பவில்லை என்றார்.

இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் மூலம் இது ஒரு ஆக்‌ஷன் கதையாகத் தோன்றினாலும், படத்திற்குள் ஆழமான உணர்ச்சிபூர்வமான கதைக்களம் இருப்பதாக நானி தெரிவித்தார். 1980-களின் செகந்திராபாத் பின்னணியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ‘ஜடால்’ என்ற கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், நீதி மற்றும் சுயமரியாதைக்காகப் போராடும் ஒரு புரட்சிகரப் போராட்டமாக இக்கதை உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய சூழலில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்பே பான்-இந்தியா என விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில், நானி அந்த அணுகுமுறையை மறுத்துள்ளார். “எங்களின் முதன்மையான இலக்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமே. தெலுங்குடன் சேர்த்து பிற மொழிகளிலும் படம் வெளியாகிறது. மற்ற மொழி ரசிகர்களும் இப்படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என நம்புகிறோம். ஆனால் இதனைப் ‘பான்-இந்தியா’ படம் என அழைக்க விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply