ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது

Priya
1554 Views
1 Min Read

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

அந்தவகையில், ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து, ரூ.14,155-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 536 ஆக இருந்தது.

அதேநேரத்தில், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் இருந்தது. அந்தவகையில் 8 நாட்களுக்கு பிறகு வெள்ளியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply