ரூ.230 கோடியை கடந்தது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வசூல் – தமிழ், தெலுங்கிலும் ரிலீஸ்!

Priya
717 Views
1 Min Read

நிவின் பாலி நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் மொத்த வசூல் ரூ.230 கோடியைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகி இருக்கிறது.

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. உலக அளவில் ரூ.230 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது.

இதனிடையே படத்துக்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழில் படம் 200க்கும் அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நிவின் பாலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகத்தில் 200-க்கும் அதிகமான திரைகளில் வெளியீடு. கொண்டாட்டம் தொடங்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் தெலுங்கிலும் படம் வெளியான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

கிரிஸ் ஏ.டி இயக்கத்தில், நிவின் பாலி – மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பனிகர், வினய் ஃபோர்ட், ரோஷன் ஷாநவாஸ், ஷ்யாம் மோகன், ஷமீர் கான், ஸ்ரீண்டா, பார்வதி அய்யப்படாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பாவனா ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் திலீஷ் போதன், ஃபஹத் ஃபாசில் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply