ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ நவ.27-ல் ரிலீஸ்

Priya
666 Views
1 Min Read

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மைசா’ படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து படக்குழு பகிர்ந்துள்ள தகவலில், ‘மன வலிமைமிக்க இயல்புடையவர், அசாத்திய துணிச்சல் மிக்கவர், அசைக்கமுடியாத மன உறுதி கொண்டவர். முன்னெப்போதும் பார்க்காத ராஷ்மிகா மந்தனாவுடன் ‘மைசா’வின் உலகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். நவம்பர் 27-ம் தேதி படம் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது.

‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக இருந்த ரவீந்திர புள்ளே இயக்கி இருக்கிறார். நாயகியை மையமாக கொண்ட இப்படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து, ‘‘கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது” என்று இயக்குநர் ரவீந்திர புள்ளே தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply