500 அரசு சேவைகளை கைபேசி மூலம் நேரடியாக பெற வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி அறிமுகப்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

Priya
681 Views
1 Min Read

அரசு சேவை​களை கைபேசி மூலம் நேரடி​யாக பெற, ரூ.5 கோடி​யில் வெற்றி தமிழ்​நாடு சூப்​பர் செயலி அறி​முகப்​படுத்​தப்​படும் என அமைச்​சர் ரா.கு​மார் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில், செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில்​நுட்​ப​வியல், டிஜிட்​டல் சேவை​கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்​களுக்கு பதிலளித்து அமைச்​சர் ரா.கு​மார் பேசி​ய​தாவது: பொது​மக்​கள் அரசு அலு​வல​கங்​களுக்கு அடிக்​கடி செல்ல வேண்​டிய தேவையை குறைக்​கும் வகை​யில் பிறப்பு சான்​றிதழ், குடும்ப அட்டை மற்​றும் ஓட்​டுநர் உரிமம் புதுப்​பித்​தல் உள்​ளிட்ட 500 அரசு சேவை​களை தங்​களது கைபேசிகள் மூலம் நேரடி​யாக பெறு​வதற்கு ஏது​வாக ‘வெற்றி தமிழ்​நாடு சூப்​பர் செயலி’ அறி​முகப்​படுத்​தப்​படும், ரூ.5 கோடி​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

பொது​மக்​கள் தங்​களது ஆலோ​சனை​கள் மற்​றும் பரிந்​துரைகளை அரசுடன் பகிர்ந்து கொள்​ள​வும், அரசின் திட்​டங்​கள் குறித்து தங்​களது கருத்​துகளை தெரிவிக்​க​வும் வெற்​றித் தமிழ்​நாடு இணை​யதளம் ரூ.1 கோடி​யில் உரு​வாக்​கப்​படும்.

தமிழகத்​தில் செயற்கை நுண்​ணறிவு அடிப்​படையி​லான தயாரிப்​பு​களின் வளர்ச்​சியை விரைவுபடுத்​தும் வகை​யில் ‘தமிழ்​நாடு தொழில் முனை​வோருக்​கான இலவச செயற்கை நுண்​ணறிவு சேவை​கள்’ என்ற திட்​டம் ரூ.10 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும். தமிழ்​நாடு மின்​னணு நிறு​வனம் மூலம் வெற்றி தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு சிறப்பு மையங்​கள் நிறு​வப்​படும் என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply