அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘இருளன்’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

Priya
923 Views
1 Min Read

இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாண்டியர்களின் மீன் சின்னம், கையில் வேல் கம்பு என நிற்கும் அருண் விஜயின் தோற்றம் மிரட்டலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் உள்ளது.

முத்தையாவின் தென்மாவட்ட கதைகள பாணியில் அருண் விஜயின் இந்தத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

நேதாஜி பிலிம்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கும் ‘இருளன்’ படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்தில் அருண் விஜயுடன், மிர்னா, சமுத்திரகனி, ஜான் கொக்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply