கும்பகோணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

Priya
744 Views
1 Min Read

தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யை தரக்குறைவாக பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கும்பகோணத்தில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யை, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசினார்.

இந்த பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தவெக மகளிர் அணியினர் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனையடுத்து, கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி தலைமை வகித்தார்.

இதில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட மாநகரச் செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர் ஆதிலட்சுமி கிழக்கு, ஒன்றிய செயலாளர் கிரி உள்ளிட்ட ஏராளமான பங்கேற்று திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply