ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

Priya
553 Views
1 Min Read

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கான முகப்பவுடரில் கருப்பை புற்றுநோய் உண்டாக்கும் ஆஷ்பஷ்டாஸ் துகள்கள் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்கு தொடர்ந்த 76,000 பேருக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்கி வழக்குகளை முடித்து வைக்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கு தொடுத்தவர்களுக்கு 2027-ல் ரூ.29,000 கோடி வழங்கவும், எஞ்சிய தொகையை 2028-ல் வழங்குவதாக ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ளது. வழக்கு தொடர்ந்தோரின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் இறுதியாக சமரச தொகை உயர வாய்ப்பு உள்ளது. இறுதியில் ரூ.67,000 கோடி வரை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தந்து வழக்குகளை முடிக்க வாய்ப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply