மது​வால் ஏற்​படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்​தும் படம்

Priya
29 Views
1 Min Read

ஏ.ஆர்​.சுரேஷ் பாபு இயக்கி நடிக்​கும் படம், ‘இன்​ஸ்​பெக்​டர் சூர்யா பேச்​சுலர் பார்ட்​டி’.

இதில் எம்​.சதீஷ்கு​மார், சோனியா தாஸ், நிஷா, வினோத், தீபா சங்கர், அசோக் பாண்​டியன், பெஞ்​சமின், ராஜேந்​திரன் என பலர் நடித்​துள்​ளனர். ஜெயக்​கு​மார் தங்​கவேல் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். சந்​தோஷ்.கே இசையமைக்​கிறார்.

வி.கே.​வி.பிக்​சர்ஸ் சார்​பில் டாக்​டர் வடிவேலன் பி.ஜே. விமல்​ராஜ் சிவ​சாமி தயாரித்துள்ளார். திரு​வண்​ணா​மலை மற்​றும் அதன் சுற்று​வட்​டாரப் பகு​தி​களி​லும், புதுச்​சேரி​யிலும் இதன் படப்​பிடிப்பு நடை​பெற்​றுள்​ளது. இந்​தப் படத்​தின் முதல் பார்வை வெளி​யாகி உள்​ளது.

“மது​வால்​ ஏற்​படும்​ விபத்​துகளை​யும்​ அதனால்​ ஏற்​படும்​ பாதிப்புகளை​யும்​ சொல்​லும்​ படம்​ இது. மக்​களுக்​கு விழிப்புணர்வை ஏற்​படுத்​தும்​ வகை​யில்​ உரு​வாகிறது” என்​றது படக்​குழு.

Share This Article
Leave a Comment

Leave a Reply