தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

Priya
20 Views
1 Min Read

 தமிழ்நாட்டில் நேற்றூ நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ததற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவரது கூறியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்:

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply