“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” – வைரலாகும் அனுபமா பதிவு

Priya
17 Views
1 Min Read

நடிகை அனுபமா பரமேஸ்​வரன் தமிழ், தெலுங்​கு, மலை​யாளப் படங்​களில் நடித்து வரு​கிறார். தமிழில் தனுஷின் கொடி, துருவ் விக்​ரம் நடித்த ‘பைசன்’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். அவர் வெளி​யிட்​டுள்ள பதிவு சமூக வலை​தளங்​களில் பல யூகங்களை ஏற்​படுத்தி இருக்​கிறது.

அவர் தனது பதி​வில், “இன்​றி​லிருந்​து, எனது வாழ்க்​கை​யைத் தேர்ந்​தெடுக்​கிறேன். இனி யாருடைய அனு​ம​தி​யும் தேவையில்லை. இனி பயமும் இல்​லை. நானே என் சுயத்​தைத் தேடிக் கண்​டடைகிறேன். ஒரு காலத்​தில், என்​னுடையது என்​பதை மறந்​திருந்த அந்த வாழ்க்​கையை மீண்​டும் நேசிக்​கத் தொடங்குகிறேன்.

நான் மீண்​டும் என்​னிடம் திரும்பி வரு​கிறேன். நீண்ட கால​மாகச் சொல்ல விரும்​பிய ஒரு விஷ​யம் இருக்​கிறது, சொல்​வதற்கு அனுமதி மறுக்​கப்​பட்ட அந்த விஷ​யம் இது​தான், ‘உங்​கள் அனைவரை​யும் நேசிக்​கிறேன்’. எனக்​குத் துணை​யாக நின்றதற்கும், என் மீது நம்​பிக்கை வைத்​ததற்​கும், என் வாழ்க்கையை மிகுந்த அன்​பால் நிரப்​பியதற்​கும் நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளார்.

நடிகை அனுபமா இளம் நடிகர் ஒரு​வரைக் காதலித்து வரு​வ​தாக சில மாதங்​களுக்கு முன் செய்​தி​கள் வெளி​யானது. அவர்களுக்குள் பிரிவு ஏற்​பட்​டதை அடுத்து அனுபமா இப்​படிப் பகிர்ந்​துள்​ள​தாக​ ரசிகர்கள் கூறி வரு​கின்​றனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply