ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு: அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்க அழைப்பு

Priya
27 Views
1 Min Read

ஊரக வளர்ச்​சித் துறை தொழி லா​ளர்​கள் சங்க மாநில மாநாட்​டில் பங்​கேற்க, அமைச்​சர் என்​.ஆனந்​துக்கு சங்க நிர்​வாகி​கள் நேற்று அழைப்பு விடுத்​தனர்.

தூய்மை பணி​யாளர்​களின் ஊதிய உயர்​வு, பணிநிரந்​தரம் உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ்​நாடு ஊரக வளர்ச்​சித் துறை தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் இரண்​டாம் மாநில மாநாடு, திருச்சி மாவட்​டம் மணப்​பாறை​யில் வரும் ஆக.21, 22-ம் தேதி​களில் நடை​பெறவுள்​ளது. இரண்டு நாள் நடை​பெறும் மாநா​டானது 21-ம் தேதி பொது மாநா​டாக​வும், 22-ம் தேதி பிர​தி​நி​தி​கள் மாநா​டாக​வும் நடை​பெற இருக்​கிறது.

இதில் ஏஐடி​யுசி, ஊரக வளர்ச்​சித்​துறை ஊராட்சி ஒன்​றிய பணி​யாளர் சங்​கம், ஊரக உள்​ளாட்சி பணி​யாளர் சம்​மேளனம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் சங்​கம், தமிழ்​நாடு ஊராட்சி செய​லா​ளர்​கள் சங்​கம் என பல்​வேறு சங்​கத்தை சேர்ந்த நிர்​வாகி​களும், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், எம்பி கே.சுப்​ப​ராயன் உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பங்​கேற்​க​வுள்​ளனர்.

பொது மாநாட்​டில் ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை அமைச்​சர் என்​.ஆனந்த் பங்​கேற்று நிறைவுரை வழங்​கு​கிறார். இதையொட்​டி, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அமைச்​சர் என்​.ஆனந்தை தமிழ்​நாடு ஊரக வளர்ச்சி தொழிலா​ளர் சங்க நிர்​வாகி​கள் மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​து, மணப்​பாறை​யில் நடை​பெறவுள்ள மாநில மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு அழைப்பு விடுத்​தனர்.

இந்​நிகழ்​வில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில துணைச் செய​லா​ளர் என்​.ர​வி, மாநில நிர்​வாக குழு உறுப்​பினர் த.லெனின், தமிழ்​நாடு ஊரக வளர்ச்சித் தொழிலா​ளர் சங்​கத்​தின் தலை​வர் ரா​மாநிதி உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply