Sofa மாடல் ஆட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Priya
11 Views
1 Min Read

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர் மற்றும் அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், இப்படிப்பட்ட சோஃபா மாடல் ஆட்சிக்கு ஏன் தான் வாக்களித்தோமோ என்று மக்கள் தினம் தினம் வருத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் 2021-இல் திமுக ஆட்சி அமைத்த போது, இந்த அரசுக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே, என்று திமுக-விற்கு வாக்களிக்காதவர்கள் கூட வருத்தப்பட்டனர். சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

இந்நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு தேர்தலில் தோற்றதற்கே பல கட்சிகளில் ஏராளம் பிரச்சனைகள் வெடித்துள்ளது. எப்போதுமே லட்சியத்திற்காக பாடுபடும் கட்சி திமுக. முதல்வர் டிபன் பாக்சில் எடுத்து வந்து சாப்பிட்டார், கண்ணாடி போட்டார், கோட் போட்டு வந்தார், இன்று வேட்டி சட்டையில் வந்தார் என்றெல்லாம் செய்திகள் தினம் வெளியாகிறது. இப்படி முதல்வரின் தினசரி செயல்பாடுகள் மட்டுமே சமூக ஊடகங்களில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே மாநிலத்தில் என்ன என்ன பிரச்சனைகள் நடக்கின்றன என்பதை முதல்வர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply