தமிழகத்திற்கான நிதியை கொள்கை எதிரியிடம் கேட்டு பெறுவாரா? இல்லை அங்கேயும் மவுன விரதம் இருப்பாரா.!!

Priya
28 Views
1 Min Read

கொள்கை எதிரி என பாஜக-வை கூறும் முதல்வர் விஜய், தனது மவுன விரதத்தை கலைத்து தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை கேட்டு பெறுவாரா என்று அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ஏனென்றால் கொள்கை எதிரி என்று பாஜக-வை கூறிவிட்டு, அந்த கட்சி ஒன்றிய அரசாக இருக்கும் சூழலில், தமிழகத்திற்கு தேவையான நிதியை வாய் விட்டு கேட்பாரா அல்லது மவுன விரதத்தை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் கடைபிடித்த மவுன விரதத்தை தமிழகத்தின் முதல்வராக இருக்கும் விஜய், டெல்லி நிதிஆயோக் கூட்டத்தில் கலைப்பாரா.! அல்லது கடைபிடிப்பாரா என்று எதிர்பார்ப்பு தான் தமிழகத்தில் இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது என்றார். அதே போல தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு முதல்வர் ஒரு பாரத பிரதமரை வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஒரு வரலாற்றை உருவாக்கியவர் தான் நம்முடைய முதல்வர் விஜய் தம்பி! சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்துக்களுக்கும், புகார்களுக்கும் அங்கேயே பதில் கூறாமல் வீட்டுக்கு சென்று சமூக வலைதளங்களில் பதில் அளித்தவர் தான் நம்ம முதலமைச்சர் விஜய் தம்பி

இப்படிப்பட்ட குணம் கொண்டவர் நிதி ஆயோக் கூட்டத்திலேயாவது வளர்ச்சி திட்டங்களை பற்றி பேச வேண்டும். முதல்வர் பற்றி நாங்கள் சொல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இல்லை, தமிழ்நாட்டு மக்களின் மீது இருக்கிற அக்கறையின் காரணமாக இதை நாங்கள் சொல்கிறோம் என வீடியோவில் பேசி இருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply