திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில் ஆட்சி நடக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

Priya
17 Views
2 Min Read

சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுக-வில் இணைத்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக-வை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கொண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம். பொதுவாக சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத்தான் செல்வார்கள். அதிலும் ஆளும் கட்சியை நோக்கித்தான் அதிகம் செல்வார்கள். ஆனால் இன்று தி.மு.க-வை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது

எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கூட தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளதை நான் வரவேற்கிறேன் என்றார். ஆட்சி முக்கியம் இல்லை, ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் கருணாநிதி எதிர்த்தார் என்று ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். எனவே திமுக-விற்கு எப்போதும் ஆட்சி முக்கியமில்லை என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply