தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க அன்புமணி வலியுறுத்தல்

Priya
6 Views
2 Min Read

தமிழகத்​தில் சாதிவாரி மக்​கள்​ தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​களை உடனடி​யாகத் தொடங்க பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை: சமூகநீ​தியை காக்​கும் நோக்​குடன், இந்​திய வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், 2-ம் முறை​யாக சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பை கர்​நாடக அரசு நடத்​தி​யிருப்​பது பாராட்​டத்​தக்​கது.

கர்​நாடகத்​தில் ஏற்​கெனவே கடந்த 2015-ம் ஆண்​டில் முதன்​முறை​யாக சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பை அம்​மாநில அரசு மேற்​கொண்ட நிலை​யில், அதன்​பின் 10 ஆண்​டு​களுக்கு பிறகு, கடந்த ஆண்டு செப்​.22-ம் தேதி முதல் மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

கடந்த ஜனவரி, பிப்​ர​வரி மாதங்​களில் இந்​தப் பணி​கள் முடிவடைந்​தது. அதில் கிடைத்த தரவு​கள் தொகுக்​கப்​பட்டு அதன் அறிக்கை அம்​மாநில முதல்​வரிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. இது​போல தமிழகத்​தி​லும் சமூகநீ​தியை பாது​காக்​கும் நோக்​குடன் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பை நடத்த வேண்​டும்.

தமிழகத்​தில் 69 சதவீத இட ஒதுக்​கீட்டை எதிர்த்து உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்​கு, தொழில்​நுட்​பக் காரணங்​களின் அடிப்​படை​யில் புதன்​கிழமை முடித்து வைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனாலும், அதை எதிர்ப்​ப​தற்​காக சமூகநீ​தி​யின் எதிரி​கள் முன்​வைத்த காரணங்​கள் அப்​படியே இருப்​ப​தால், எந்த நேர​மும் 69 சதவீத இட ஒதுக்​கீட்​டுக்கு எதி​ராக உச்​ச நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​படலாம்.

அதை எதிர்​கொள்​ள​வும் சமூகநீதி கணக்​கெடுப்​பு அவசி​யம். எனவே, தமிழகத்​தில் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பை உடனடி​யாக நடத்த முதல்​வர் விஜய் ஆணை​யிட வேண்​டும். இவ்​வாறு அதில் அவர் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை திரு​வான்​மியூரில் இருந்து உத்​தண்டி வரை 13.30 கிமீ தொலை​வுக்கு உயர்​ மட்ட பாலம் அமைப்​ப​தற்​காக கடந்த பிப்​ர​வரி​யில் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது.

ஆரம்​பக் கட்ட பணி​கள் தொடங்​கப்​பட்​டு, நடை​பெற்ற நிலை​யில், திட்​டத்​துக்​கான மதிப்​பீட்​டில் 50 சதவீதம் வரை ஊழல் நடை​பெற்​றிருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​து, இது தொடர்​பாக சென்னை உயர் ​நீ​தி​மன்​ற​மும் சில வழி​காட்​டு​தல்​களை வழங்​கியது.

இந்​நிலை​யில், அதன் கட்​டு​மானப் பணி​களை சம்​பந்​தப்​பட்ட நிறு​வனம் மேற்​கொள்ள தமிழக அரசு அனு​ம​தித்​திருக்​கிறது. இப்​பணி​களை உடனடி​யாக நிறுத்த தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும்.

மேலும், இப்​பணிக்​காக சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்ள ஒப்​பந்​தத்​தை​யும் ரத்து செய்ய வேண்​டும் என்று பாமக தலை​வர்​ அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply