சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை

Priya
83 Views
1 Min Read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.Politics

இதனையடுத்து, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply