சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.!

Priya
238 Views
3 Min Read

பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இதில் பணியாற்றும் போலீசாருக்கான பிரத்தேயக சீறுடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக கடந்த திமுக ஆட்சி மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வகையில் தவெக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்ததிற்கான கையெழுத்திட்டார். இதையடுத்து அந்த திட்டம் நடைமுறை படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெண்கள் பாதுகாப்பை ஒற்றை இலக்காக வைத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபி அலுவலகத்தில், ஒரு ஜஜி, போலீஸ் எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்ற சம்பவங்கள் நடக்காமல், சிங்கப்பெண்கள் சிறப்பு படையினர் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உட்பட, பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கும் வகையில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுப்பர். முதற்கட்டடாக சிங்கப்பெண் அதிரடிபடை ஐஜியாக பவானீஸ்வரியை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் அந்த படை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த படையில் பணியாற்று போலீசாருக்கென்று தனியாக பிரேத்யேகமாக சீருடை ஒன்று தயாராகி வருகிறது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை- அசத்தும் சீருடை
இதில் கருப்பு நிற தொப்பி முன்புறத்தில் சின்னத்துடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேவி ப்ளூ நிற அரைக்கை சட்டையில் தோள்பகுதியில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்புறத்தில் இரண்டு பாக்கெட்டுகள் மற்றும் முழு பட்டன் அமைப்புடன் காலர் வடிவமைப்பு செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கிறது. வலது மார்புப் பகுதியில் தங்க எழுத்துக்களுடன் கருப்பு வெல்க்ரோ பெயர்ப் பலகை அணியவும், இடது மார்பில் ரெஜிமென்ட் லோகோ கொண்ட உலோக பதக்கம் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடது தோள்பகுதியில் காகி நிற லேன்யார்டு அணியப்படும். கருப்பு வெப் பெல்ட் உறுதியான பக்கிளுடன் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காகி நிற கால்சட்டை நேர்த்தியான முன் மடிப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ளதுடன், கருப்பு நிற காலணிகள் பணிக்கேற்ற வகையில் இலகுவாகவும் வசதியாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply