அரசு பேருந்துகளில் இதுவரை 473 கோடி பயண நடைகள் மகளிர் இலவச பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்தை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் விடியல் பயணம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இதுவரை 473.61 கோடி பயண நடைகளில் மகளிர் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் 28.62 லட்சம் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர்கள் 3.78 கோடி நடைகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல் தினசரி 1.76 கோடி பேர் வரை பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் இதுவரை 791 புதிய பேருந்துகளும் மற்றும் 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன இந்த ஆண்டு இறுதிக்குள் 7682 புதிய பேருந்துகளும் 1500 கூண்டு புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here