இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பரில் அந்நாட்டு அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே நாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உயர்தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் வளாகங்களைத் தொடங்க ஊக்குவிக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை 2020-இல் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் ஐஐடி வனாகங்கள் பல்வேறு வெளிநாடுகளில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தான்சானியா வின்ஜான்ஜிபார் நகரில் சென்னை ஐஐடி- யின் முதல் வளா கம் அமைக்கப் பட்டு கடந்த ஆண்டு நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. அது போல, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் தில்லி ஐஐடி வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஐடி வளாகம் அமைக்க பிரிட்டனும் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதுபோல, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்தும் பல ஐஐடி-களுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.இவ்வாறு வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கென ஐஐடி நிலைக்குழுத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் தான்சானியா, ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து ஐஐடி-வின் மூன்றாவது வெளிநாட்டு வளாகம் இலங்கையில் அமையவிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கென இலங்கை அரசு சென்னை ஐஐடி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடி அதிகாரிகள் கூறுகையில்,

இலங்கையில் ஐஐடி வளாகம் அமைப்பது தொடர்பாக இலங்மையிலிருந்து உயர்நிலைக் குழு ஒன்று அண்மையில் சென்னை ஐஐடி வந்தது. ஐஐடி நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதோடு ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சிப் பூங்காவையும் பார்வையிட்டனர். இலங்கையின் கண்டியில் சென்னை ஐஐடி வளாகம் அமைய வாய்ப்புள்ளது என்றனர்.

அவ்வாறு இலங்கையில் ஐஐடி வளாகம் அமைக்கப்பட்டால் வெளிநாட்டில் அமையும் ஐஐடி மூன்றாவது வெளிநாட்டு வளாகமும், சென்னை ஐஐடி-யின் இரண்டாவது வளாகம் என்ற பெருமை கிடைக்கும். முன்னதாக படிப்பில் சிறந்து விளங்கும் இலங்கை மாணவர்களுக்கு 2017-18 கல்வியாண்டு முதல் இந்தியாவிலுள்ள ஐஐடி-க் களில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here