குழந்தைகள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(24/09/24) சென்னையில் போட்டித் தேர்வு சேவை மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான ஆய்வு மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு மாநில திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், இந்திய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் மேடையில் பேசியதாவது:
“நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 30,000 பேர் பயனடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டத்திற்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 36 பேர் மட்டுமே UPSC தேர்வில் கலந்து கொண்டனர்.“நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 46 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இது தான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு UPSC தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். நாளைய ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.