250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ துர்க்கையம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தையும், ஶ்ரீ ரத்தின விநாயகர் ஆலயத்தையும், மெட்ரோ பணிகளுக்காக இடிக்க இந்து மத விரோத திமுக அரசு முடிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவினர் சொத்துக்கள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசுப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிப்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை ராயப்பேட்டையில், சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ துர்க்கையம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தையும், ஶ்ரீ ரத்தின விநாயகர் ஆலயத்தையும், மெட்ரோ பணிகளுக்காக இடிக்க இந்து மத விரோத திமுக அரசு முடிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவினர் சொத்துக்கள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசுப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிப்பாரா? அறிவாலயத்துக்குள் அமைந்திருக்கும் திறந்த வெளி நிலத்தை, பூங்காவாகப் பராமரிக்கிறோம் என்று கூறிக் பல ஆண்டு காலமாக, சிலைகளை வைப்பதும், வாகன நிறுத்தமாகவும் பயன்படுத்தி வந்ததையும், அந்த இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் திமுக தாமதப்படுத்தியதையும் பொதுமக்கள் மறக்கவில்லை.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவறிக்கை தயாரிக்கும்போதே, ஆலயங்களின் தொன்மையைக் கருதி, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கைக் கையாண்டு வரும் திமுக, இதனை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதாகவே தெரிகிறது.

பொதுமக்களுக்காகவே திட்டங்களே தவிர, பொதுமக்கள் நம்பிக்கையைச் சிதைப்பதற்காக அல்ல என்பதை திமுக அரசுக்கு நினைவுபடுத்தி, உடனடியாக, தொன்மை வாய்ந்த ஆலயங்களை இடிக்க முயற்சிப்பதை நிறுத்தி விட்டு, மாற்றுப் பாதையில் மெட்ரோ பணிகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here