கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக மருத்துவ சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எப்போதும் போல அவசர சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு மருத்துவர்களும் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் போராடுமாறு மருத்துவர்களுக்கு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.