தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, கோவை – பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மன்ட் மார்க்கத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி )காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.இந்த ரயில்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;

“வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும். வந்தே பாரத் ரயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழ்நாட்டின் கோயில் நகரையும், கர்நாடகாவில் ஐ.டி.நகரையும் வந்தே பாரத் ரயில் இணைக்கும். வந்தே பாரத் ரயில்கள் மூலம் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். வந்தே பாரத் ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here