உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய உரிமையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதை நினைவுகூரும் ஒரு சிறப்பு தினமாகும்.
இன்று, உலகம் முழுவதும் சுமார் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியால் வாடுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பதை உறுதி செய்வது இந்த உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாகும்.
காலநிலை மாற்றம், போர்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, உலக உணவு நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், நிலையான விவசாயம் மற்றும் உணவு வீணாவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த உலக உணவு தினம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.